அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டு கடல்சார் தகவல் மையம் மற்றும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடன் தொடர்புடைய துறைமுக வசதிகளுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல்சார் முற்றுகை மற்றும் இந்தப் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இராணுவ மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை 'மிகவும் ஆபத்தான' மட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் கடற்படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இராணுவத்தினர் கப்பல்களின் பாதுகாப்பிற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதியினூடாகப் பயணிக்கும் கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.