ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ஈரானின் அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது ட்ரம்பின் தூதுவர் மைக் வோல்ட்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரானில் வலுவடைந்துள்ள போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான உதவிகள் வந்துக்கொண்டிருப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை தூக்கிலிடமாட்டோம் என ஈரான் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் தற்போது அடக்கு முறையை நிவர்த்தி செய்ய அனைத்து விருப்பங்களும் மேசையில் இருப்பதாக மைக் வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.