தென் கொரியாவுடன் அமெரிக்கா போர்ப் பயிற்சி; எச்சரிக்கை விடுத்த வட கொரியா!
அமெரிக்காவுடன் இணைந்து, வான் வழி தாக்குதல் பயிற்சிகளில் தான் ஈடுபட்டதாக தென் கொரியா இன்று தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை இப்பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இவ்வருடம் நடத்தப்பட்ட முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும்.
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, அமெரிக்கா, தென் கொரியா இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தப்போவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் லீ ஜோங் சப் ஆகியோர் அறிவித்து ஒரு நாளின் பின் இக்கூட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் பீ-1பீ ரக குண்டுவீச்சு வீமானங்கள், எவ்-11 ரக போர் விமானங்கள், தென் கெரியாவின் எவ் 35 போர் விமானங்கள் ஆகியன மஞ்சள் கடலுக்கு மேலாக பறந்தன என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இத்தகைய பயிற்சிகள் முழு அளவிலான மோதலுக்கு வழிவகுக்கும் என வட கொரியா எச்சரித்துள்ளது.