வெனிசுலாவின் போதைப்பொருள் கப்பலை தாக்கிய அமெரிக்க இராணுவம் ; ட்ரம்ப் வெளியிட்ட காணொளி
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் போதைப்பொருட்களை கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்தியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்ட காணொளி
இதேவேளை, அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் வெனிசுலா நாட்டு கப்பல் பற்றி எரியும் 28 வினாடிகள் கொண்ட காணொளியையும் ட்ரம்ப் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் ட்ரம்ப் கூறியதாவது, “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த தாக்குதல் அவசியம். நீங்கள் அமெரிக்கர்களை கொல்லக்கூடிய போதைப்பொருட்களை விநியோகம் செய்வதால், நாங்கள் உங்களை வேட்டையாடுகிறோம்.
போதைப்பொருள் விநியோகம் மூலம் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை கொன்றுள்ளனர். இனி நாங்கள் அதனை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.“ - இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.