முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு கருத்து ; அமெரிக்காவில் அரசியல் கொந்தளிப்பு!
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரேண்டி ஃபைன் (Randy Fine ), முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்கள் அமெரிக்காவில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரேண்டி ஃபைனுக்கு (Randy Fine ), கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ரேண்டி ஃபைன் (Randy Fine ), , கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டார்.
சுமார் 4 கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இந்தப் பதிவு, சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம், ரேண்டி ஃபைன் (Randy Fine ), தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ், ரேண்டி ஃபைனை (Randy Fine ), "இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் அருவருப்பான மதவெறியர்" என்று விமர்சித்துள்ளார். மேலும், குடியரசுக் கட்சியினர் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.