புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அமெரிக்கா பிறப்பித்த அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் பல்வேறு விசாக்கள் மூலம் வசிக்கும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
டிரம்பின் நிர்வாக உத்தரவு
அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல் என்ற டிரம்பின் நிர்வாக உத்தரவின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் அவர்களின் அடையாள ஆவணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.
அமெரிக்காவில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அல்லாத அனைவரும் படிவத்தை நிரப்பி அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். குடியேறிகளின் குழந்தைகளும் 14 வயது ஆன 30 நாட்களுக்குள் மீண்டும் பதிவு செய்து கைரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் 11 திகதி அல்லது அதற்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
எச்-1பி உள்ளிட்ட செல்லுபடியாகும் விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
எனவே அவர்கள் மீண்டும் படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை. ஆனாலும், அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களுடன் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.