உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட தகவல்!
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில் அண்மையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூட சமீபத்தில் அங்கு சென்று அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) சந்தித்து ஆதரவைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தபோது அவரிடம், “ உக்ரைன் செல்வீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது , “எனக்கு தெரியாது என்பதுதான் உங்கள் கேள்விக்கான பதில்” என பைடன் பதில் அளித்தார்.
அதேவேளை கடந்த வாரம், “உக்ரைன் போக தயாராக இருக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியபோது, அதற்கு ஜோ பைடன் (Joe Biden) அளித்த பதில் “ஆமாம்” என கூறியிருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் அல்லது வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரைக் கொண்ட உயர்மட்ட குழுவை, உக்ரைன் தலைநகர் கீவ் அனுப்பி வைக்க அமெரிக்க அரசு பரிசீலிப்பதாக செய்திகள் வெளியா இருந்தமை குறிப்பிடத்தக்கது.