அமெரிக்காவில் தொடர்ந்து சரியும் ஜோ பைடனின் செல்வாக்கு
அமெரிக்காவில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் செல்வாக்கு சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்.
கொரோனா பரவல், வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி என பல பிரச்சனைகள் இவர் முன் இருந்தன.
பதவியேற்றதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதீத கவனம் செலுத்தினார் ஜோ பைடன்.
இதனால் பதவிக்கு வந்த 3 மாத காலத்தில் அமெரிக்க மக்களிடம் ஜே பைடனின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது.
ஆனால் தற்போது ஜோ பைடனின் செல்வாக்கு, இதற்கு முன் வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் சந்திக்காத அளவுக்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் முதல் 3 மாதங்களில் ஜோ பைடனின் செல்வாக்கு 56 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 11.3 சதவீதம் குறைந்து 44.7 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை திரும்ப பெற்றதே இந்த சரிவுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.