இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு சிறப்பு தூதரை அனுப்பும் அமெரிக்க அதிபர் ஜோ பிடென்

covid19 india biden Net Price Daniel Smith
By Sulokshi May 01, 2021 09:09 AM GMT
Report

அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரி டேனியல் ஸ்மித்தை (Daniel Smith) இந்தியாவுக்கு இடைக்கால தூதராக அமெரிக்க அதிபர் ஜோ பிடென்(Joe Biden), அனுப்புகிறார்.

இந்தியா எதிர்கொள்ளும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவுக்கு தடுப்பூசிக்கான மூலப்பொருள் வழங்குவதில் அமெரிக்கா நடந்து கொண்ட விதத்தால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கையில்,

இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கும், இரு நாடுகளும் தங்களது பகிரப்பட்ட முன்னுரிமைகளை தொடர்ந்து முன்னேற்றுவதை உறுதி செய்வதற்கும், கொரோனா தொற்றுநோயை சமாளிப்பதற்கு உதவுவதற்கும், ஜோ பிடென்(Joe Biden), தனது உயர்மட்ட நம்பகமான ராஜதந்திரியை இடைக்கால சிறப்பு தூதராக இந்தியா அனுப்புவதாக, குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை பொறுப்பு செயலாளராகவும், வெளியுறவுத் துறை துணை பொறுப்பு செயலாளராகவும் பணியாற்றிய வெளியுறவு சேவை நிறுவனத்தின் இயக்குனர் தூதர் டேனியல் ஸ்மித்,(Daniel Smith) இடைக்கால சிறப்பு தூதராக பணியாற்ற இந்தியாவிற்கு புறப்படுவார்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் 46’வது ஜனாதிபதியாக பிடென் பதவியேற்ற பின்னர் ஜனவரி 20 முதல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு செனட் உறுதிப்படுத்தல் தேவை. நியமனத்திற்குப் பிறகு உறுதிப்படுத்தும் செயல்முறை பொதுவாக பல மாதங்கள் ஆகும். இந்தியாவில் உள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பிடென் நிர்வாகம் தூதர் இல்லாமல் தனது தூதரக செயல்பாடுகளை இந்தியாவில் மேற்கொள்வது மிகவும் சிரமம் ஆகும்.

இந்த நிலையில் ஸ்மித் (Daniel Smith) மிக உயர்ந்த வெளிநாட்டு சேவை தரத்தை கொண்ட தூதராக செயல்படுவார் என அமெரிக்காவின் ஜோ பிடென் (Joe Biden)நிர்வாகம் நம்புகிறது. “ஸ்மித்தின் நியமனம் இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுடனான எங்கள் கூட்டாண்மைக்கு அமெரிக்காவின் வலுவான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் (Net Price) கூறினார்.

“உலகளாவிய தொற்றுநோயைக் கடந்து செல்வது உட்பட, நம்முடைய பகிரப்பட்ட முன்னுரிமைகளை நம் நாடுகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்வதற்காக அவர் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை முன்னெடுப்பார்” என்றும்  பிரைஸ்  (Net Price) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US