அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்; முன்னிலையில் டிரம்ப் !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருந்து வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அதிபராக உள்ள பைடனின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் நேற்றியதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று வாக்குகள் எண்னப்பட்டுக்கொண்டிடுக்கின்றன.
கமலா ஹாரிஸைவிட டொனால்டு டிரம்ப் முன்னிலை
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை.
எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.
அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று தொடங்கிய நிலையில் வெளியான தகவல்களின் படி கமலா ஹாரிஸைவிட டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களில் இருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை டிரம்ப் 162 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரையிலும் 81 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.