உக்ரைனுக்கு மீண்டும் நிதி உதவி வழங்கும் அமெரிக்கா! எந்த மில்லியன் டாலர் தெரியுமா
உக்ரைன் மீது ரஷ்யா 73 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகின்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகின்றது.
இதையடுத்து, மரியுபோல் நகர் மீது ரஷியா பார்வையை பதித்தது. போர் தொடுத்த நாள் முதல் அங்கு முற்றுகையிட்டது. அந்த நகரின் மீது ஏவுகணை தாக்குதலும், குண்டுவீச்சும் நடத்தி பெரும்பாலான கட்டிடங்களை சேதப்படுத்தி உருக்குலைய வைத்தது.
அந்நகரை கைப்பற்றி விட்டதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தபோதும், கடைசி கோட்டை போல அந்த நகரின் அஜோவ் உருக்காலை வீழாமல் இருக்கிறது. இந்த ஆலைக்குள் 2 ஆயிரம் படை வீரர்களும், ஆயிரம் பொதுமக்களும் இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், (Joe Biden) ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 150 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கி குண்டுகள், ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் பாதுகாப்பு உதவியின் மற்றொரு தொகுப்பை நான் அறிவிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.