காசாவில் போர்நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா தீர்மானம்
காசாவில் மோதல் தீவிரமடைந்துள்ள வேளை, அங்குத் தற்காலிக போர்நிறுத்தம் கோரி ஐ.நா-வின் பாதுகாப்பு அவையில் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில், மோதல் தொடர்பான ஐ.நா-வின் வாக்கெடுப்பின்போது ‘போர் நிறுத்தம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தவிர்த்து வந்த வேளை, காசாவில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது இதுவே முதல் முறை என்றும் அச்செய்திகள் கூறுகின்றன.
மேலும் இந்த வார இறுதியில் அமெரிக்க வரைவு தீர்மானம் பற்றிய பேச்சுக்கள் தொடங்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கும் அதேவேளை, முன்மொழிவு வாக்கெடுப்புக்கு விடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பட்டுள்ளது.