சா்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க - ரஷ்ய தலைவா்கள் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)எதிர்வரும் ஜூன் மாதம் 16-ஆம் திகதி ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பை வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ஜென் சாகி நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறுதி செய்தார். பெல்ஜியத்தில் உள்ள புருசேல் நகரில் ‘நேட்டோ மாநாடு’ அடுத்த மாதம் 13 மற்றும் 14-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடின் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு பின்னர் பைடன்-புடின் ஜெனீவாவில் சந்திக்கவுள்ளனர். சந்திப்பின்போது இருநாட்டுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்து, நல்லுறவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ஜென் சாகி தெரிவித்தார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக புடினை சந்திக்கவுள்ளமை சா்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.