அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு நேர்ந்த பெரும் துயரம்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஈரி நகரில் வெள்ளிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றொருவர் அந்தக் குடும்பத்தின் நண்பர் எனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் கர்ப்பிணிப் பெண்ணொருவரும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஈரி நகர பொலிஸ் அதிகாரி ரிக் லோரா தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பொதுமக்களுக்கு தற்போது வேறு எந்தவிதமான ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.