அமெரிக்காவின் தென்மேற்கு முழுவதும் பரவிய ஆபத்தான வெப்ப அலை
அமெரிக்காவின் பீனிக்ஸ், லாஸ் வேகாஸ், டென்வர் மற்றும் கலிபோர்னியாவின் Death Valley ஆகிய பகுதிகளில் சனிக்கிழமையன்று அதி உச்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபீனிக்ஸில் உள்ள தேசிய வானிலை சேவையானது 114 டிகிரி பாரன்ஹீட் (46 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையைப் பதிவுசெய்தது, இது 1918ம் ஆண்டுக்கு முன்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
அதேவேளை, லாஸ் வேகாஸ் 1956ல் பதிவான வெப்பநிலையை சமன் செய்ததாகவும், சனிக்கிழமை பதிவான வெப்பநிலை 109 டிகிரி பாரன்ஹீட் (43C) என தெரிய வந்துள்ளது.
இரு நகரங்களிலும் அதிக வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது. கொலராடோவில், டென்வர் பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் (38 C) ஐ எட்டியது,.
கலிபோர்னியாவின் உள்பிரதேசங்களில் பல பகுதிகளிலும் அதிகபட்சமாக 122 டிகிரி பாரன்ஹீட் வரையில் பதிவாகியுள்ளது. வடக்கு கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கு மற்றும் தென்கிழக்கு பாலைவனங்கள் வரை அதிக வெப்ப எச்சரிக்கைகள் மற்றும் வெப்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நியூ மெக்ஸிகோ மற்றும் டெக்சாஸின் பகுதிகளும் மூன்றிலக்க வெப்பநிலையை பதிவு செய்துள்ளன.
புயல், பெருவெள்ளம் மற்றும் சூறாவளி உள்ளிட்ட வானிலை தொடர்பான பிற பேரழிவுகளை விட அதிக வெப்பம் அமெரிக்காவில் அதிக இறப்புகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.