ஈரானின் இராணுவத் திறனை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், கிழக்கு நேரப்படி (ET) பிற்பகல் 3 மணி முதல் ஈரான் மீது ஒரு சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய இராணுவத் திறன்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதல்களின் இலக்குகள் அல்லது அதன் விரிவான அளவு குறித்த மேலதிக விவரங்களை மத்திய கட்டளையகம் (CENTCOM) வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
CENTCOM launched a round of strikes against Iran at 3 p.m. ET today for the seventh consecutive night. The strikes are designed to continue degrading Iranian military capabilities at the Commander in Chief's direction.
— U.S. Central Command (@CENTCOM) July 17, 2026