ஈரானிலிருந்து இந்தியா வரவிருந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரானின் மஷ்ஹாத் விமான நிலையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், இந்தியாவுக்கு வரவிருந்த விமானம் சேதமடைந்தது.
இந்த தாக்குதல் ஈரானுக்கான மனிதாபிமான உதவி பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட இந்த விமானம், ஈரானிய மக்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் இதர உதவிகளைப் பெற்று செல்வதற்காக ஏப்ரல் 1-ஆம் திகதி புதுடெல்லிக்கு வரவிருந்தது.
முன்னதாக, மார்ச் 18 அன்று இந்தியா தனது முதல் தவணை மருத்துவ உதவிகளை ஈரான் செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்கியிருந்தது. இதற்கு இந்திய மக்களுக்கு ஈரான் தூதரகம் நன்றியும் தெரிவித்திருந்தது.
தனியார் நிறுவனமான மஹான் ஏர், ஆசியாவின் பல நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.
தற்போதைய இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், திட்டமிட்டபடி இந்தியாவிடமிருந்து உதவி பொருட்களை பெறுவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.