ஈரானுடனான போரில் அமெரிக்காவுக்கு 3.3 பில்லியன் டாலர் இழப்பு; மூடி மறைக்கும் வெள்ளை மாளிகை
ஈரானுடனான போரில் அமெரிக்காவுக்கு ரூ.32 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஈரானில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் 81 ராணுவ விமானங்கள் மற்றும் 45 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இதன் மொத்த மதிப்பு சுமார் 3.3 பில்லியன் டாலர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க காங்கிரஸின் ஆய்வு சேவை (சிஆர்எஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இரு நாடுகளுக்கும் இழப்பு
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் 81 ராணுவ விமானங்கள் மற்றும் 45 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் மேம்பட்ட போர் விமானங்களான எப்-35ஏ லைட்னிங் 2, எப்-15 மற்றும் எம்க்யூ-9 ரீப்பர் ட்ரோன்கள் உள்ளிட்டவை இந்த இழப்பில் அடங்கும். ஒவ்வொரு எப்-15 போர் விமானத்தின் மதிப்பு 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.
எம்க்யூ-9 ரீப்பர் ட்ரோன்களின் மதிப்பு தலா 30 முதல் 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நவீன 5-ம் தலைமுறை போர் விமானங்களில் ஒன்றான எப்-35ஏ-யின் மதிப்பு 92 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும்.
மேலும், அமெரிக்கப் படைகள் 12 எப்-15இ விமானங்கள், ஒரு எப்-35ஏ லைட்னிங் 2 போர் விமானம், 2 ஏ-10 தண்டர்போல்ட் தரைத்தாக்குதல் விமானங்கள் மற்றும் 7 கேசி-135 ஸ்ட்ராடோடேங்கர் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை இழந்துள்ளன.
போரின்போது அமெரிக்கா ஒரு ஏஎச்-64 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர், 4 ஏச்-6 லிட்டில் பேர்ட் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு எம்எச்-60 சீஹாக் கடற்படை ஹெலிகாப்டரையும் இழந்துள்ளது.
மொத்தத்தில், இப்போரால் அமெரிக்காவுக்கு 3.3 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களுக்கான செலவும் ஒரே மாதத்தில் 6 பில்லியன் டாலருக்கும் மேல் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிக்கை குறித்து வெள்ளை மாளிகையும், அமெரிக்க பாதுகாப்புத் துறையும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.