ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதியால் சர்ச்சை
கடவுச்சீட்டுகளில் இரு பாலினத்தை மட்டுமே குறிப்பிட வழிவகுக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (6) அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு கடவுச்சீட்டில் பாலின அடையாளங்களை ஆண் அல்லது பெண் என்று மட்டுமே கட்டுப்படுத்தும் கொள்கையை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

பாலின அடையாளம்
இந்த தீர்ப்பு ட்ரம்ப் நிர்வாகத்தை அந்த கொள்கையை தொடர அனுமதிக்கும் அதேவேளையில், அதனை எதிர்த்து வழக்கு தொடரவும் அனுமதி அளிக்கிறது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் பாலின அடையாளத்துடன் பொருந்தக்கூடிய வகையில் கடவுச்சீட்டுகளில் M, F ஐ தெரிவு செய்து புள்ளடியிட (x) அனுமதிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் மற்றும் Biological classification ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்கா ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினங்களை அங்கீகரிக்கும் என்று ஜனவரி மாதம் ட்ரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவில் இருந்து கடவுச்சீட்டு கொள்கை உருவானது.
அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஆண் அல்லது பெண் என மட்டுமே குறிப்பிட முடியும்.