அமெரிக்க மாகாணம் ஒன்றை தாக்கிய சூறாவளி புயல்! 6 பேருக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியுள்ளது.
இதனால் பலத்த மழையும் பெய்த நிலையில் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன.
குறித்த சூறாவளியால் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்தன.
சூறாவளி புயல் மழைக்கு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.