எலான் மஸ்கை கடுமையாக சாடும் அமெரிக்க உப ஜனாதிபதி
எலான் மஸ்க் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்துவிட்டார் என அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே உள்ள மோதல் குறித்து அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியதாவது
எலான் மஸ்கின் பதிவுகள் பெரிய தவறு
எலான் மஸ்க் கொஞ்சம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நான் நினைக்கிறேன். ட்ரம்ப் குறித்து எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் பெரிய தவறு. அவர் உணர்ச்சிவசப்படுகிறார்.
அவர் தனது அமைதியை இழந்துவிட்டார். ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகள். தற்போது எலான் மஸ்கின் செயல், நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது அவருக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன்.
எலான் மஸ்க் மீண்டும் ட்ரம்புடன் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன். எலான் மஸ்க் எதிர்க்கும் மசோதா செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல.
இது ஒரு நல்ல மசோதா ஆகும். ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழிவகுத்த போதிலும், செலவுகளைக் குறைத்த எலான் மஸ்க் செயல் பாராட்டுக்குரியது.
அவர் ஒரு சிறந்த தொழில்முனைவோராக திகழ்ந்தார். ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எலான் மஸ்க் கூறியது முற்றிலும் பைத்தியகாரத்தனமானது.
ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார். இவ்வாறு உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறினார்.