பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் அமெரிக்கா; குற்றம் சுமத்தியுள்ள ஹமாஸ்
அமெரிக்கா தனது போர்க்கப்பலை இஸ்ரேலுக்கு அனுப்புவதன் மூலம் பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் ஆக்கிரமிப்பில் தன்னையும் இணைத்துக்கொள்கின்றது என பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலை மத்தியகிழக்கிற்கு அமெரிக்கா அனுப்புவதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீன மக்களிற்கு எதிரான வன்முறையில் தன்னையும் இணைத்துக்கொள்கின்றது என தெரிவித்துள்ள ஹமாஸ், இவ்வாறான நடவடிக்கைகள் எங்கள் மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர் போர்ட் அணுவாயுத கப்பல் ஏவுகணைகப்பல்கள் ஏவுகணைகளை அழிக்கும் கப்பல்கள் மத்திய கிழக்கிற்கு புறப்பட்டுள்ளன. அமெரிக்கா மத்திய கிழக்கை நோக்கி தனது போர்விமானங்களையும் தயார்படுத்தியுள்ளது.
அத்துடன் ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்பார்த்தே அமெரிக்கா தயார் நிலையில் உள்ளதாகவு தெரிவிக்கப்பட்டுள்ளது.