குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கி டிரம்ப் ; சட்டவிரோதமாக தங்குபவர்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, நாட்டின் குடியேற்றக் கொள்கைகளை மேலும் கடுமையாக்கி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர் விசாக்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வந்துள்ள சுமார் 55 மில்லியன் விசா வைத்திருப்பவர்கள் தற்போது “தொடர்ச்சியான கண்காணிப்பு” முறையில் பரிசோதிக்கப்படுகின்றனர்.
இவர்களின் சமூக ஊடகப் பதிவுகள், குற்றச் செயல்கள், பயண விவரங்கள் உள்ளிட்டவை அரசால் ஆராயப்படுகிறது.
விதிமுறைகளை மீறுவோர் அல்லது சட்டவிரோதமாக தங்குபவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் பகுதியாக, சுமார் 6,000 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்விக்காக வந்தவர்களில் சிலர் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் உள்ளனர்.