அமெரிக்காவை விமர்சனம் செய்யும் கனடா
அமெரிக்காவினால் வெளிநாட்டு உதவிகளை இடையில் நிறுத்தும் தீர்மானத்திற்கு கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த உதவிகளை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு வெளிநாடுகளுக்கான உதவி நிறுத்தப்படுவது ஆபத்தானது என கனடா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவன பணியாளர்கள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டு உள்ளனர்.
உதவிகள் வழங்கப்படுவது இடைநிறுத்துவது அறக்கட்டளைகள் மற்றும் உதவி திட்டங்களை வெகுவாக பாதிக்கும் என கனடா சுட்டிக்காட்டி உள்ளது.
யுஎஸ்எயிட் உதவி திட்டத்தின் கீழ் சுமார் 120 நாடுகளில் உதவி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
யுஎஸ்எயிட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கனடாவும் பங்களிப்பச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.