கனடாவில் கார் கொள்வனவு செய்வோருக்கு முக்கிய செய்தி
கனடாவில் யூஸ்ட் கார் அல்லது பயன்படுத்திய கார் வகைகளின் விலைகள் சரியத் தொடங்கியுள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கனடாவில் கார் விலைகள் உயர்வினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் நிலவி வரும் மைக்ரோ சிப் வகைகளுக்கான தட்டுப்பாடு வாகனங்களின் விலையில் பெரும் தாக்கத்தை செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில் பயன்படுத்தப்பட்ட அல்லது யூஸ்ட் கார்களின் விலைகளும் உச்சம் தொட்டிருந்தது.
எனினும் அண்மைய இரண்டு மாதங்களாக யூஸ்ட் கார்களின் விலைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன.
பயன்படுத்தப்பட்ட கார்களின் சராசரி விலையானது தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக 0.4 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் பயன்படுத்தப்பட்ட கார்களின் சராசரி விலை 38097 டொலர்களாக உச்சம் தொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் புதிய கார் வகைகளின் விலைகள் மேலும் மேலும் அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாக கார் விற்பனை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜுலை மாதம் புதிய கார் ஒன்றின் சராசரி விலையானது 55469 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.