மூன்றாவது தடுப்பூசி அளிக்க தயாராகும் ஒன்ராறியோ: யார் யாருக்கு முன்னுரிமை?

Arbin
Report this article
டெல்டா மாறுபாடின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒன்ராறியோ பொதுமக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்துள்ளது.
இதனால் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள மக்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசிகள் அளிக்க உள்ளனர். இந்த வாரத்தில் இருந்தே பூஸ்டர் டோஸ்கள் அளிக்க முடிவு செய்துள்ளதால், நீண்ட காலமாக காப்பகத்தில் வசிப்பவர்கள், முதியோர் இல்லங்கள், புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சையில் இருப்பவர்கள், பூர்வக்குடி மக்களின் முதியோர் விடுதிகள் என பட்டியலிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அமெரிக்காவின் FDA பூஸ்டர் டோஸ்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையிலேயே ஒன்ராறியோ இந்த முடிவை எடுத்துள்ளது. மட்டுமின்றி, மொத்த அமெரிக்க மக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி அளிக்க அங்குள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 8 மாதங்களில் இந்த பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், பூஸ்டர் டோஸ் தொடர்பில் இன்னும் நிபுணர்கள் தரப்பில் இருவேறு கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. ஒன்ராறியோவை தொடர்ந்து Saskatchewan மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆல்பர்ட்டா உட்பட பூஸ்டர் டோஸ்கள் குறித்து எஞ்சிய மாகாணங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆல்பர்ட்டா போன்று கியூபெக்கும் பொது சுகாதாரத்துறை நிபுணர்களின் பரிந்துரைக்காக காத்திருக்கிறது என்றே தெரிய வந்துள்ளது.