தேர்தலுக்கு தயாராகும் கனடா: வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ள முக்கிய கேள்வி...
கனடா, தேர்தலுக்குத் தயாராகிவரும் நிலையில், வாக்காளர்கள் மனதில் முக்கிய கேள்வி ஒன்று எழுந்துள்ளது...
அது, வாக்களிக்கச் செல்வதற்கு தடுப்பூசி போட்டிருக்கவேண்டியது அவசியமா என்ற கேள்விதான்!
கியூபெக்கிலும், மனித்தோபாவிலும் ஏற்கனவே தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறையில் உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா செப்டம்பர் 13 அன்று தடுப்பூசி அட்டை திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. (ஒன்ராறியோவில் செப்டம்பர் 22 அன்றுதான் தடுப்பூசி சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட உள்ளது).
இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு தடுப்பூசி பெற்றிருக்கவேண்டியது அவசியமா, தடுப்பூசி பெறாவிட்டால் வாக்களிக்க முடியாதா என்பது போன்ற சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.
இந்த கேள்விகளுக்கு கனடா தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில், 2021 பெடரல் தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டிய அவசியமோ, அல்லது, வாக்களிப்பதற்கு தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டிய அவசியமோ கிடையாது என்பதுதான்...
சொல்லப்போனால், வாக்குச்சாவடிகளில் பணி புரிவோருக்குக் கூட தடுப்பூசி பெற்றிருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் கனடா தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.