கனடாவில் வறட்சியான பகுதிகளில் பரவும் ஆபத்தான நோய்!
காலநிலை மாற்றம் காரணமாக கனடாவில் ஆபத்தான நோய் ஒன்று பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்கஸ் வகை ஒன்றினால் இந்த நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலி ஃபீவர் என்று அழைக்கப்படும் இந்த நோயானது தற்பொழுது கனடாவிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான வரட்சி நிலவும் பகுதிகளிலே இந்த நோய் பரவுகை காணப்பட்டது.
குறிப்பாக பாலைவனப் பகுதிகளில் இவ்வாறான நோய் பரவுகை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் காலநிலை மாற்றத்தினால் தற்பொழுது இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெறும் கண்ணுக்கு தென்படாத இந்த பங்கஸ் வேகமாக பரவக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான வெப்பநிலை நிலவும் பகுதிகளில் ஏற்படக்கூடிய இந்த காய்ச்சல் தற்பொழுது கனடாவின் சில பகுதிகளிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.