கனடாவில் டாக்ஸியில் இடம்பெற்ற குற்றச் செயல்: நீதிமன்றம் விதித்த தண்டனை
கனடாவின் வாங்கூவார் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை விநியோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எம்.டி.ரபிக்குள் இஸ்லாம் என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போதை பொருளை வைத்திருந்தமை அவற்றை விநியோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டு இருந்தது.
56 வயதான குறித்த நபருக்கு 20 மாத கால வீட்டு காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிக நுட்பமான முறையில் போதைப்பொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாங்கூவார் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல்கள் விநியோகங்களை வேறு நபர்கள் மேற்கொண்டிருந்தாலும் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.