ட்ரம்பை சந்திக்கவுள்ள வெனிசியூலா எதிர்க்கட்சித் தலைவர்
வெனிசியூலா எதிர்க்கட்சித் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாளை மறுதினம் (15) வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் படைகள் வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஜனவரி 3ஆம் திகதி கைது செய்த பின் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை உலகின் கவனத்தை திருப்பியுள்ளது.

அதேவேளை மதுரோ பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மரியா கொரினா மச்சாடோ ட்ரம்பைப் பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது , அமெரிக்க ஜனாதிபதி நீண்ட காலமாகப் பகிரங்கமாக விரும்பும் விருதான அவரது அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்க மரியா கொரினா மச்சாடோ முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.