அமெரிக்கா அறிவுப்புக்கு வெனிசுலா ஜனாதிபதி பதிலடி
வெனிசுலா ஜனாதிபதி குறித்த தகவல்களுக்கு சன்மானம் அறிவித்த அமெரிக்காவின் செயல்பாட்டை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா - வெனிசுலா இடையே கடந்த பல தசாப்தங்களாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
கரீபியன் கடலில் அமெரிக்கா
வெனிசுலாவில் புரட்சி கும்பல்களுக்கு நிதிக் கொடுத்து நாட்டுக்கு எதிரான கலகத்தை அமெரிக்கா ஊக்குவிப்பதாக வெனிசுலா குற்றம் சாட்டி வரும் நிலையில், வெனிசுலாவில் இருந்துதான் போதைப்பொருட்கள் ஏராளமாக அமெரிக்காவிற்குள் நுழைவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் இதை சாக்காக பயன்படுத்தி கரீபியன் கடலில் அமெரிக்கா தனது கடற்படை ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ எதிராக இருக்கிறார்.
இந்நிலையில் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக குற்றம் சாட்டியது. இதை மறுத்த வெனிசுலா அரசு அமெரிக்காவிடம் ஆதாரங்களை கேட்டது. அதற்கு அமெரிக்கா ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
மதுரோவுக்கு குற்ற அமைப்புகளுடன் தொடர்புள்ளதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களை தந்தால் 50 மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானம் என அறிவித்தது. ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்ட வந்ததாக அமெரிக்காவின் செயலை மதுரோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோ தனது கரங்களை தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் வெனிசுலா மக்களின் ரத்தத்தால் கறைப்படுத்திக் கொள்கிறார் என அமெரிக்காவின் அத்துமீறல்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.