ஹாலிவுட் மூத்த நடிகர் ரொபர்ட் டால் காலமானார்
பிரபல ஹொலிவுட் மூத்த நடிகர் ரொபர்ட் டுவால் (Robert Duvall) தனது 95ஆவது வயதில் காலமானார்.
'தி கோட்பாதர்' (The Godfather) உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களில் நடித்த ஒஸ்கார் விருது பெற்ற மூத்த நடிகர் ரொபர்ட் டுவால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வேர்ஜீனியா பண்ணை இல்லத்தில் காலமானார்.

அவரது மறைவை மனைவி லூசியானா (Luciana) சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். "எனது அன்புக்குரிய கணவர், எமது காலத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவர், அவர் அமைதியாக விடைபெற்றுக்கொண்டார்" என அவர் பதிவிட்டுள்ளார்.
1962 ஆம் ஆண்டு 'To Kill A Mockingbird' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரொபர்ட் டுவால், சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முத்திரை பதித்தவர்.
ஏழு முறை ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இவர், 1983இல் வெளியான 'Tender Mercies' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்றார்.
ஒஸ்கார் மட்டுமன்றி, நான்கு கோல்டன் குளோப் விருதுகள், ஒரு பாஃப்டா (BAFTA), ஒரு ஸ்க்ரீன் எக்டர்ஸ் கில்ட் விருது மற்றும் இரண்டு எம்மி (Emmy) விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.