ஓடுபாதையை நெருங்கியபோது ஏற்பட்ட அதிர்வு ; அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச வானூர்தி நிலையத்தில் தரையிறங்கத் தயாராக இருந்த டெல்டா ஏயார்லைன்ஸ் வானூர்தி ஒன்று, நிலநடுக்கம் காரணமாகத் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு மீண்டும் மேலெழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 28ஆம் திகதி தெற்கு கலிபோர்னியா கடலோரப் பகுதியில் மெக்னிடியூட் 5.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில், கன்சாஸ் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிப் பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் 1972 என்ற வானூர்தி தரையிறங்குவதற்காகத் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது.
இதன்போது நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதால், வானூர்திப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி வானூர்தியைத் தரையிறக்காமல் மீண்டும் மேலெழுமாறு வானூர்திக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, வானூர்தி தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு வானூர்தியை மீண்டும் மேலெழச் செய்துள்ளார்.
பின்னர், குறித்த வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.