மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கிய உப ஜனாதிபதி!
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் ஆர்ஜென்டினாவின் உப ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸுக்கு(Cristina Fernandez) 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதாகவும், வாழ்நாள் முழுவதும் அரசாங்க நிறுவனத்தில் பதவி வகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2007 முதல், அவர் இரண்டு முறை நாட்டின் ஜனாதிபதி பதவியை வகித்துள்ளார். மேலும் அவரது கணவரும் ஆர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி ஆவார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆர்ஜென்டினாவின் உப ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருக்கும் போது குற்றத்துக்காக தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.