ஸ்பெய்னில் சடலமாக மீட்கப்பட்ட கனேடிய பிரஜை!
கனேடிய பிரஜையொருவர் ஸ்பெய்னில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கனடாவின் விக்டோரியாவைச் சேர்ந்த நபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஸ்பெய்னில் காணாமல் போயிருந்தார்.
67 வயதான ஸ்கொட் கிரஹாம் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
குறித்த நபரை ஸ்பெய்னின் மெட்ரீட்டில் இறுதியாக கண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் சடலம் கிடைக்கப் பெற்றது என்ற தகவல் வெளியிடப்பட்ட போதிலும் எங்கு எப்போது என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கிரஹம் நோய்வாய்ப்பட்டிருந்தார் எனவும் அவர் தொடர்ச்சியாக மருந்து பயன்படுத்தி வந்தார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும், இறுதியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஸ்பெய்ன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.