ஸ்வீடன் நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு டிஜிட்டல் திரைகளை பார்க்க தடை
ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டு பெற்றோருக்கு தொலைக்காட்சியோ அல்லது செல்போன் டிஜிட்டல் திரையோ 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை, தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலிருந்து தள்ளிவைக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு பொது சுகாதாரத் துறை பெற்றோருக்கு தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல் 12 வயதுக்கு உள்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.