காஸாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் போது வெடித்த வன்முறை ; 20 பேர் பலி
காஸாவில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.
காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காஸா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இந்த அறக்கட்டளையின் மூலம் தினமும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அப்படி உணவு பொருட்களை பெறும் போது, சிலர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கொல்லப்படுகின்றனர்.
இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 875 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா., மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பலஸ்தீனத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கான் யூனிஸில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் இடத்தில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.