ஜெர்மனியில் பதற்றத்தை ஏற்படுத்திய வன்முறை சம்பவங்கள்!
ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற மே தின ஊர்வலங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மே 1 ஆம் திகதி உழைப்பாளர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜெர்மனியில் பல நகரங்களில் மே 1 ஆம் திகதி மே தின கெண்டாட்டங்கள் நடை பெற்று இருந்தன.
இந்நிலையில் பேர்ளினில் பல இடங்களில் மே தின கூட்டங்கள் நடை பெற்ற பொழுது பல வன்முறைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பல இடங்களில் குழுக்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதில் பெண்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் திசையை மாற்றி அனுப்பியதாக தெரிய வந்திருக்கின்றது.
மேலும் ஒரு சில குழுக்களில் வன்முறை இடம்பெற்றுள்ள நிலையல் பொலிஸார் ஈடுப்பட்டு வன்முறையை கட்டுப்படுத்தியுள்ளனர்.