வைரலாகும் பிரதமர் ரிஷி சுனக் நடிப்பு!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நடித்துள்ள காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லண்டனில் எண் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டன் பிரதமருக்கான இல்லத்தில் இந்த படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
1990-ல் வெளியான ‘ஹோம் அலோன்’ படத்தின் காட்சிகள் போலவே பிரதமர் ரிஷி சுனக் நடிக்கும் காணொளி பலரது வரவேற்பையும் பெற்று வருகிறது.
தனியே விளையாடும் ரிஷி சுனக்
”நான் மட்டும் தான் இங்கு இருக்கிறேனா” என அவர் கேட்டுவிட்டு வீட்டில் தனியாக இருக்கும்போது சிறுவர்கள் செய்வதுபோல விளையாடத் தொடங்கிவிடுகிறார்.
காணொளி இறுதியில், வரவேற்பறைக்கு வருகிற அழைப்பை ரிஷி எடுத்து “ஹாரி உங்களுக்குத் தவறான எண் கிடைத்துள்ளது” எனப் பேசுவதோடு அந்த விடியோ முடிகிறது.
Merry Christmas from Downing Street ? pic.twitter.com/cr0ZIdQmeR
— Rishi Sunak (@RishiSunak) December 25, 2023
ஹாரி கோல், லண்டனின் சன் செய்தி நிறுவனத்தின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஆவார், சுனக்கின் அலைபேசி எண்ணை அவர் வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அதனைக் குறிப்பிடும் வகையில் இதில் ஹாரி பெயரைப் பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்படும் நிலையில் ரிஷி சுனக்கின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இக்காணொளி வெளியாகியுள்ளது.