பதவியிழந்த டிரம்பை தனியே விட்டு சென்ற மெலனியா; வைரல் காணொளி
முன்னாள் அமெரிக்க டிரம்ப் உடன் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க மறுத்து மெலானியா நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதிவியேற்ற போது, அந்த விழாவை புறக்கணித்து வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறினார்.
இதனை அடுத்து ஃபுளோரிடாவில் டிரம்ப்பும் அவரது மனைவி மெலானியாவும் விமானத்திலிருந்து இறக்கி வந்தபோது அங்கு கூடியிருந்த புகைப்படக்காரர்களுக்கு டிரம்ப் கை அசைத்து போஸ் கொடுத்தார்.
இதன்போது மெலானியா, டிரம்ப் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் இறங்கிய வேகத்தில் நடையை கட்டினார். இதனால் டிரம்ப் தனியாளாக நின்று போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.