சீனா - இந்திய பிரஜைகளுக்கு விசா தேவை இல்லை; அதிரடி ஆஃபரை வழங்கிய நாடு!
சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி செல்ல அனுமதி வழக்கப்படும் என மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அறிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 30 நாட்களுக்கு மலேசியாவிற்கு சீனா மற்றும் இந்தியா பிரஜைகள் விசா இன்றி செல்ல முடியும்.
மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் ஒரு உரையின் போது மலேசிய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த வீசா எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும் என்று கூறவில்லை.
மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் சீனாவும் இந்தியாவும் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் மலேசியாவிற்கு சீனாவிலிருந்து 1.5 மில்லியன் பேரும் இந்தியாவில் இருந்து 354,486 பேரும் சென்றுள்ளனர்.
இதனுடன் ஒப்பிடுகையில், இவ் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையில் சீனாவிலிருந்து 498,540 பேரும் இந்தியாவில் இருந்து 283,885 பேரும் மலேசியாவிற்கு சென்றுள்ளார்கள்.
அதேவேளை தாய்லாந்து சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், மந்தமான பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும் இலவச விசா முறையை அமுல்படுத்தியுள்ளது. அதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன.
அதனை தொடர்ந்து மலேசியாவும் அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.