அண்டார்டிகாவில் தினமும் வீணாகும் 10 பவுன் தங்கம்; நகைப்பிரியர்கள் ஷாக்!
உலகெங்கும் உள்ள மக்களால் விரும்பப்படும் தங்கம் , அண்டார்டிகாவில் தினமும் 10 பவுன் தங்கம் வீணடிக்கப்படுவதாக தெய்விக்கப்படுகின்றமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி அண்டார்டிகாவின் உள்ள மவுண்ட் எரேபஸ் (Molunt Erebus) என்கிற எரிமலை நாள்தோறும் சுமார் 10 பவுன் தங்கத்தை காற்றில் கக்குகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மதிப்பு ஆண்டுக்கு தோராயமாக 18.9 கோடி என சொல்லப்படுகிறது.

ஆண்டுக்கு தோராயமாக 18.9 கோடி தங்கம்
இந்த தங்க துகள்கள் எரிமலையிலிருந்து 1000 கிலோ மீட்டர் தூரம் வரை பரவி அண்டார்டிகா பனிப்பாறைகளில் படிவதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. உலகில் தங்கம் வாங்கி சேர்க்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது.
ஒரு பக்கம் அதை வர்த்தகத்திற்கு பலரும் பயன்படுத்தினாலும் பொது மக்களை பொருத்தவரை தங்க நகையை அணிவதை பெண்கள் பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறார்கள்.
பல நாடுகளில் டாலரின் மதிப்பு கூட அந்த நாட்டில் உள்ள தங்கத்தை அடுப்படையாக கொண்டு கணிக்கப்படுவதாக சொல்லப்படுவதுண்டு. இந் நிலையில் அண்டார்டிகாவில் எரிமலை நாள்தோறும் சுமார் 10 பவுன் தங்கத்தை காற்றில் கக்குகிறதாக தெரிவிக்கப்படுகின்றமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.