1,000 உக்ரைனிய அகதிகளுக்கு கைகொடுக்க தயாராகும் வேல்ஸ்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலால் அங்கிருந்து இடம்பெயர்ந்த 1,000 உக்ரைனிய அகதிகளை கவனிக்க வேல்ஸ் திட்டமிட்டுள்ளதாக, வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
எனினும், வேல்ஸ் பொறுப்பேற்கும் அகதிகளின் எண்ணிக்கையை மொத்தமாக கணக்கிட முடியாது எனவும் அவர் கூறினார்.
வேல்ஸ் ஒரு புகலிட தேசமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும், முதல் கட்ட தீர்மானத்தை எடுப்பதற்கான திட்டங்கள் இப்போது இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட்டும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜனும் உக்ரைனிய அகதிகளை விரைவாகக் குடியமர்த்தவும், அவர்களைக் கவனித்துக்கொள்ளவும் ‘சுப்பர் ஸ்பொன்சர்கள்’ ஆக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.