Walmart கடையில் திருடியவர்களுக்கு நூதன தண்டனை!
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் உள்ள Walmart கடை ஒன்றில் திருடியவர்களுக்குக் கார்களைக் கழுவும்படி தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Walmart கடைகளில் தொடரும் திருட்டுச்சம்பவங்களால் பொருள்களின் விலை அதிகரிக்கலாம், சில கிளைகள் மூடப்படும் சூழலும் ஏற்படலாம் என்று நீதிபதி கூறினார்.
ஒரே நாளில் 48 திருட்டு வழக்குகள்
இந்நிலையில் திருடுவோர் அனைவரும் கெட்டவர்கள் அல்லர், தங்கள் பொருளாதாரச் சூழலால் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.
எனினும் சட்டத்தை மீறியதற்காக அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார். ஒரே நாளில் 48 திருட்டு வழக்குகள் விசாரணைக்கு வந்தமை ஆச்சர்யமளிப்பதாகவும் நீதிபதி கூறினார்.
அதேவேளை வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குள் சுமார் 75 முதல் 100 பேர் வரை கார்களைக் கழுவ உத்தரவு பெறுவர் என்று எதிர்பார்ப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
நீதிபதியின் உத்தரவுக்கு ஆதரவளிக்கும் Walmart நிர்வாகம், கார்களைக் கழுவுவதற்கான தண்ணீரையும் பொருள்களையும் வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.