மெக்சிகோவை பெயர் மாற்றிய கூகுள் ; மெக்சிகோ ஜனாதிபதி எச்சரிக்கை
மெக்சிகோவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.
கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ அமெரிக்க வளைகுடா
மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் குறித்து டிரம்ப் அறிவித்த சில நாள்களிலேயே கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றியது.
இருப்பினும், இந்த பெயர் மாற்றமானது கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது.
மெக்சிகோ வளைகுடாவில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா என்றும், அமெரிக்காவில் அமெரிக்க வளைகுடா என்றும், கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா (அமெரிக்க வளைகுடா) என்றும் கூகுள் நிறுவனம் பெயர் மாற்றம் செய்துள்ளது