15 நாள்களில் தொப்பை குறைக்க வேண்டுமா? அப்போ மறக்கமால் இதனை செய்தாலே போதும்!
fat
cholesterol
weight loss
By Kishanthini
உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்கை முறை மாற்றங்கள் காரணமாக உடல் எடை அதிகமாகிறது. இதனால் சிறு வயதிலேயே தொப்பை உருவாகிறது.
சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் தொப்பை உருவாகிறது. இன்றைக்கு பலர் இப்பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.
இதனை ஆரம்பத்திலே தடுக்க ஒரு சில வழிகள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- அதிகாலையில் சிறிய வெள்ளரிக்காயை நறுக்கி ஒரு சொம்பு நீரில் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு, புதினா இலை ஒரு கைப்பிடி, இஞ்சித்துருவல் மூன்று டீஸ்பூன் கலந்து மூன்று மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் குடித்தால் 15 நாட்களின் பலன் தெரிய ஆரம்பிக்கும்.
இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவெளியில் மூன்று மாதங்கள் வரை குடித்து வந்தால் நிச்சயம் தொப்பை காணாமல் தட்டை வயிறைப் பெறலாம். பகல் நேரங்களில் மோருடன் புதினா, இஞ்சி, வெள்ள ரிக்காய் அரைத்து சேர்த்து குடிக்கலாம்.
- வெள்ளரிக்காய், புதினாஇலைகளை மைய அரைத்து அதனுடன் இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாறு சேர்த்து குடிக்கலாம். இஞ்சியின் காரத்தை புதினாவின் மணமும் எலுமிச்சையின் புளிப்பும் குறைத்துவிடும். இந்த பானங்களை தொப்பக் குறைய மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் எடுத்துக்கொள்ளலாம்.
- முட்டைகோஸ் தொப்பை அதிகரிக்காமல் தடுக்கும் என்பதால் அவற்றைத் தொடர்ந்து எடுத்துகொள்ளலாம்.
- பச்சையாக பூண்டு , ஓட்ஸ், தக்காளி, காளான், பாதாம் போன்றவை யும் தொப்பையைக் குறைக்கும்
- காலையில் எழுந்ததும் 10 தோப்புக்கரணங்களைப் போடுங்கள். இது தொப்பை குறைக்க உதவலாம்.
- பொருள்களை கீழே போட்டு குனிந்து நிமிர்ந்து எடுப்பது போன்று 40 முறை செய்யுங்கள். எப்போதும் நாற் காலியில் அமராமல் தரையில் சம்மணமிட்டு அமருங்கள். இன்னும் சில எளியபயிற்சிகளை உடன் சேர்த்து செய்யுங்கள்.
- தினமும் பத்துநிமிடங்களாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். படுக்கும் போது குப்புற கவிழ்ந்து வயிற்றை அழுத்தியப்படி ஒரு மணி நேரம் படுக்கலாம். ஆனால் இதை மருத்துவர்களும் உடற்பயிற்சி நிபு ணர்களும் ஊக்குவிப்பதில்லை என்பதால் அவர்களது ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US