சுவிட்சர்லாந்தில் நீச்சல் பிரியர்களுக்கு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் ஓடும் Rhone நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீச்சல் பிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Rhone நதியில் தண்ணீர் வேகமாக ஓடுவதால் அங்கு நீந்தச் செல்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை குளிர்ச்சியாக இருப்பதால் நீந்த ச்செல்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
எனினும் , குளிரையும் மீறி நீந்தச் செல்வோரும் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் ஏரிகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதாலும், அணைகளில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதாலும், தண்ணீரின் அளவைக் குறைப்பதற்காக அணைகள் விநாடிக்கு 500 கியூபிக் மீற்றர் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதன் காரணமாக நதியின் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதுடன், தண்ணீர் வேகமாக ஓடுவதால் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.