அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் இது தான் நடக்கும் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அமெரிக்க சட்டம்
அவ்வாறு வந்தவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். தாமாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
இத்துடன், எச்1பி விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. விசா பெறுவதற்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க சட்டத்தை மீறினால், மிகக்கடுமையான கிரிமினல் அபராதத்துடன் தண்டிக்கப்படுவீர்கள்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்கவும், நாட்டின் எல்லை மற்றும் குடிமக்களை பாதுகாக்கவும் டிரம்ப் நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளது.