பாரிஸில் விரைவு விநியோக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பாரிஸில் சட்டவிரோதமாக செயல்படும் சில நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை அறிவித்துள்ளது.
சில பெரிய 'விரைவு விநியோக நிறுவனங்கள்' (de livraison ultra-rapide) உரிமம் பெறாத 'entrepôts' இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பல பிரபலமான நிறுவனங்கள் அடங்கும்.
சுமார் 65 சேமிப்புகள் இருப்பதாகவும், இந்த நிறுவனங்கள் அவற்றிற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும் நகராட்சி அறிவித்தது. இந்த நிறுவனங்களில் Cajoo, Gorillas, Flink, Glovo, GoPuff, Yango Deli, Zapp, Rohlik, Bam courses, Frichti, Delivero மற்றும் Uber Eats போன்ற முன்னணி நிறுவனங்களும் அடங்கும்.
இந்த நிறுவனங்களால் சட்டவிரோதமாக திறக்கப்பட்ட கிடங்குகளில் 65 கிடங்குகளை கணக்கிட்டுள்ளதாகவும், அவற்றில் 45 முதல் கட்டமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் நகராட்சி தெரிவித்துள்ளது.