பிரான்ஸில் நூதன மோசடியாளர்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!
பிரான்ஸில் ஏமாற்றும் புதிய மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரான்ஸின் அந்திர்-ஏ லுஆர் (Indre-et-Loire) பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளின் வாசல்கள் அல்லது தோட்டங்களுக்கு குறைந்த கட்டணத்தில் தார் செய்து தருவதாக கூறி மோசடி செய்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணம் வசூலிப்பதாக கூறியவிட்டு பணி ஆரம்பித்த பின்னர் மிகப்பெரிய அளவில் கட்டணம் கோருவதனால் மோசடி கும்பலிடம் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான மோசடியாளர்கள் தரம் குறைவான தார்களை பயன்படுத்தி வீதிகள் அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு மோசடி செய்பவர்கள் ஐரிஷ் நிலக்கீல் பணியாளர்கள் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து வைத்திருப்பவதாகவும், அவர்கள் வீடு வீடாக சென்று சேவை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கவர்சிகரமான சலுகையில் தார் வீதிகளை அமைத்து கொடுப்பதாக உறுதிமொழி வழங்கிய பின்னர், பெரிய வீதியை அமைப்பதற்கான கட்டணத்தை இறுதியில் கோருவதாக பலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முதலில் ஒரு சதுர அடிக்கு 15 யூரோ வழங்குமாறு மோசடியாளர்கள் கோருவதாக தெரியவந்துள்ளது. இது சாதாரண விலையை விடவும் பல மடங்கு குறைவு எனவும், எனினும் இருகில் அதனை விடவும் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.
எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் அவதானமாக இருக்குமாறு பிரான்ஸ் பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022